மலேசியக் கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில் அறிவாற்றல், ஆன்மீகம், உள்ளம் உடல் ஆகியவை ஒன்றிணைந்து சமன்நிலையும் இயைபும் பெற தனி மனிதரின் ஆற்றலை முழுமையா மேம்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாகும். இம்முயற்சியானது அறிவு, சால்பு, நன்னெறி, பொறுப்புணர்ச்சி, நல்வாழ்வு பெறும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றுக் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒருமைப்பாட்டையும் செழிப்பையும் நல்கும் மலேசியரை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
தேசியப்பள்ளியில் தமிழ் மொழி கூடுதல் மொழியாகவும் இரண்டாம் மொழியைக் கற்பிக்கும் அணுகுமுறையிலும் அமைந்துள்ளது. தேசியப்பள்ளிகளில் தமிழ் மொழி தொடர்பு கொள்ளும் திறனை வளர்ப்பதுடன், அம்மொழியைக் கற்பதற்கான வலுவான அடிப்படையும் அமைத்துக் கொடுக்கிறது.
இத்திட்டம் நன்னெறிப் பண்பு, அறிவு வளர்ச்சி, நாட்டுப் பற்று, ஒற்றுமையுணர்வு சமுகத்தில் உருவாகுவதற்கு வழிகாண்கிறது.
தேசிய கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ் மொழி கலைத்திட்டம் மாணவரின் அறிவாற்றல், ஆன்மீகம், உடல், உள்ளம் ஆகிய கூறுகளின் சமச்சீர் அடைய உள்ளது.
தேசியப்பள்ளியில் தமிழ் மொழியை அடிப்படை நிலையிலிருந்து கற்பர். மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தொடர்புடையதாகவும் இன்றைய சமுதாய வளர்ச்சிக்கு ஏற்புடையதாகவும் அமையும்.
தேசியப்பள்ளியில் தமிழ் மொழி கற்றல்பேறு மொழி, கலைத்திட்ட நோக்கங்களிலிருந்து பெறப்பட்ட 5 கருப்பொருளை உள்ளடக்கியுள்ளது. அவை நானும் என் குடும்பமும், பள்ளி வளாகமும் பள்ளிச் சமூகமும், வாழ்க்கை முறை, பொதுநல மற்றும் சேவைத்துறை வசதிகள், நம் நாடு ஆகியவையாகும்.
No comments:
Post a Comment