Sunday 20 November 2011

PGSR BAHASA TAMIL - இடுபணி-தமிழ் இலக்கண வரலாறு - அன்றும் இன்றும்

தமிழ் இலக்கண வரலாறு - அன்றும் இன்றும் 
தொல்காப்பியம் தொடங்கி இன்றைய இருபதாம் நூற்றாண்டு வரை பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பலநூல்கள் நமக்குக் கிடைத்ததுபோல எண்ணிலடங்கா பல நூல்கள் அழிந்தும் போயுள்ளன. நமக்குக் கிடைத்த எல்லா இலக்கண நூல்களையும் ஒன்றுதிரட்டி அவற்றைக் கால நிலையில் முறைப்படுத்தி ஒப்பிட்டு ஆய்ந்து இதுவரை ஒரு இலக்கண வரலாறு எழுதப்பட்டுள்ளனவா? என்று நோக்கும் போது இல்லை என்றே தோன்றுகின்றது. காலம் காலமாக ஓலைச்சுவடிகள் வழியாகவே நிலைபெற்றுவந்த இவ்விலக்கண நூல்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுவாகனம் ஏறி 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் முழுமைத்தன்மை அடைந்துள்ளன எனலாம்.
அச்சில் நிலைபெற்றபிறகு தமிழ் இலக்கணங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஒரு பரவலான வாசிப்புத் தன்மையைப் பெற்றன. இவ்வாசிப்பின் மூலமாக
இக்காலகட்டத்தில் இலக்கண நூல்கள் பலவும் பல்வேறு அறிஞர்களால் பலநிலைகளில் ஆராயவும் பட்டன. இலக்கண நூல்களின் ஆராய்ச்சிகள் இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்தகொண்டிருந்த நிலையில் அறிஞர் சோம. இளவரசு 1963ஆம் ஆண்டுஇலக்கண வரலாறுஒன்றை எழுதினார். இவரைப் பின்தொடர்ந்து 1985ஆம் ஆண்டு புலவர் இரா. இளங்குமரன் சோம.இளவரசு அவர்கள் சொல்லாது விட்டுவிட்ட சில செய்திகளையும், ஆராயாது விட்டுவிட்ட சில நுட்பங்களையும் சேர்த்துஇலக்கண வரலாறுஎன்னும் அதே தலைப்பில் மற்றொரு நூலை வெளியிட்டார்.
இந்நூல்களில் இருந்து சற்றேவேறுபட்ட ஒரு நூலாக 1979இல் வெளிவந்த
.வேலுப்பிள்ளை அவர்களின்தமிழ் வரலாற்றிலக்கணம்நூலினைக்
குறிப்பிடலாம். இந்நூலினுள் ‘‘தமிழிலக்கண நூல்கள் வரலாறு’’ என்னும்
தலைப்பில் பத்து பக்க அளவில் ஒட்டுமொத்தமான ஒரு தமிழிலக்கண வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது 1985, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் ஆறு.அழகப்பன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘‘இலக்கணக் கருவூலம்’’ என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை வெளியிட்டது. இந்நூல்களில் மொத்தம் 34 கட்டுரைகள் அடங்கியுள்ளன.
     தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400 இலக்கண நூல்களும் உரைகளும்என்னும் தலைப்பில் 2000த்தில் வெளிவந்த இரா.சீனிவாசன் அவர்களின் நூலானது இதுவரை தமிழ் இலக்கணங்களை நோக்கிவந்த கண்ணோட்டத்திலிருந்து விலகி புதியதொரு வரலாற்று ரீதியானப் பார்வையை முன்வைத்துள்ளது.
     தொல்காப்பியர் தனியொரு அதிகாரமாக வகுக்காதுவிட்ட யாப்பிலக்கணமானது பிற்காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதை அதற்கு தோன்றிய இலக்கண நூல்களின் எண்ணிக்கையிலிருந்தே நாம் அறிய முடிகிறது.
      அவ்வாறாகச் சிறப்பு பெற்று வளர்ந்துவந்த யாப்பிலக்கணம் குறித்து முழுமையான நிலையில் ஆராய்ந்தவர்கள் இருவர். ஒருவர் சோ..கந்தசாமி அவர்கள், மற்றொருவர் .மணிகண்டன் அவர்கள், சோ.கந்தசாமி அவர்கள் ‘‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’’ என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல்களானது தமிழ் இலக்கிய வகைகளின் யாப்பையும், அவற்றிற்கெழுந்த யாப்பிலக்கண நூல்களையும் ஒரு காலமுறைமையோடு ஒப்பிட்டு ஆய்ந்துள்ளது.
தமிழ் மொழி இலக்கண வரலாற்றை ஆரயும் பொழுது  மூன்று வகையில் இலக்கணத் தொடர்ச்சி இருந்து வந்துள்ளதை நாம் உணரலாம். அவை:
அ)  பொதுவாக, இயற்றமிழுக்கான இலக்கண நூல்கள். அஃதாவது எழுத்து,    சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்துக்கும் இலக்கணம் கூறுவதாக அமைந்த நூல்கள்.
ஆ)  இலக்கணத்தின் ஒரு பகுதிக்கு / துறைக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள்.
இ)   இலக்கண நூலுகளுக்கு விளக்கம் கூறும் வகையில் எழுதப்பட்ட உரைகளுடன் கூடிய நூல்கள்.

தமிழ் இலக்கணம் தொடர்பாக இயற்றப்பட்ட சிறப்பு நூல்கள்
1. சீனிவாசன். இரா.தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400
   இலக்கண நூல்களும் உரைகளும், தி.பார்க்கர், சென்னை, 2000, .12.
2.
மேலது, .17.
3.
மேலது, .11.

1.
இலக்கணச் சிந்தனைகள் - எஸ்.வையாபுரிப்பிள்ளை
2.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - .சண்முகதாஸ்
3.
இலக்கண வரலாறு - சோம. இளவரசு
4.
இலக்கண வரலாறு - புலவர். இரா. இளங்குமரன்
5.
இலக்கண உருவாக்கம் - செ.வை.சண்முகம்
6.
இலக்கண எண்ணங்கள் - இரா.திருமுருகன்
7.
இலக்கணமும் சமூக உறவுகளும் - கா.சிவத்தம்பி
8.
இலக்கண ஆய்வு - செ.வை.சண்முகம்
9.
இலக்கணக் கருவூலம் (1,2,3) - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
10.
மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி
11.
தமிழிலக்கணக் கோட்பாடு - பொற்கோ
12.
இலக்கண உலகில் புதிய பார்வை (1,2,3)
13.
தமிழ் வரலாற்றிலக்கணம் - .வேலுப்பிள்ளை
14.
தமிழ் இலக்கண மரபுகள் - இரா. சீனிவாசன்

15.
தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
   (
பாகம் 9 முதல் 16 வரை)

எழுத்திலக்கணம்.
1.
எழுத்திலக்கணக் கோட்பாடு -செ.வை.சண்முகம்

சொல்லிலக்கணம்.
1.
சொல்லிலக்கணக் கோட்பாடு - செ.வை.சண்முகம்
(
பாகம் 1,2,3)
பொருளிலக்கணம்
1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - வசந்தாள்
2.
அகத்திணைக் கொள்கைகள் - .சுப்புரெட்டியார்.
யாப்பிலக்கணம்
1. தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ..கந்தசாமி
  (
பாகம் 1,2,3)
2.
தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி - .மணிகண்டன்
3.
புதிய நோக்கில் தமிழ் யாப்பு - பொற்கோ.
4.
தமிழின் பா வடிவங்கள் - . சண்முகதாஸ்
5.
யாப்பியல் - அன்னிதாமசு
அணியிலக்கணம்.
1. அணியிலக்கண வரலாறு -இரா.கண்ணன்
2.
தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் - இரா. அறவேந்தன்
பாட்டியல்.
1. இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள் - மருதூர் அரங்கராசன்
2.
பாட்டியல் ஓர் ஆய்வு - நலங்கிள்ளி
இலக்கண உரைகள்
1. உரையாசிரியர்கள் - மு.வை. அரவிந்தன்
2.
உரையாசிரியர்கள் - சு..இராமசாமிப் புலவர்
3.
உரைவிளக்கு - தமிழண்ணல்
4.
உரைமரபுகள் - இரா.மோகன், நெல்லை . சொக்கலிங்கம்


இலக்கணப் பதிப்புகள்
1. தொல்காப்பியப் பதிப்புகள் - .வே. சுப்பிரமணியம்
2.
நன்னூல் பதிப்பு வரலாறு (ஆய்வேடு) - மதுகேசுவரன்
தொல்காப்பியம்
1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - மு.இராகவையங்கார்
2.
தொல்காப்பியர் காலத் தமிழர் - புலவர் குழந்தை
3.
தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை - .சுப்புரெட்டியார்
4.
தொல்காப்பியக் களஞ்சியம் - .. அறவாணன்
5.
தொல்காப்பியக் கடல் - .சு.. மாணிக்கம்
6.
தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் - வெள்ளைவாரணன்.
நன்னூல்
1.எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் - ..அறவாணன்