Wednesday 3 July 2013

உருவக அணி



உருவக அணி
உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறு வேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது
உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்டவிரும்புகிறார். கவிஞர்.

'
தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவு எனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும்
வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்ற மனவுணர்வு தோன்றுகிறது,
முகம் ஆகிய தாமரை என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப் பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

உருவக அணியின் இலக்கணம்
உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை, உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்
உருவக அணி விளக்கம்   
உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்று
வரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும்
வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு.
மலர்போன்ற கண், மலர்க்கண் - உவமை
கண் ஆகிய மலர், கண்மலர் - உருவகம்

மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும் வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகிய மலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்
வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள் காணலாம்.
உருவக அணியின் வகைகள்    
உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்று
தண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37) அவை வருமாறு:
1) தொகை உருவகம்
2)
விரி உருவகம்
3)
தொகைவிரி உருவகம்
4)
இயைபு உருவகம்
5)
இயைபு இல் உருவகம்
6)
வியனிலை உருவகம்
7)
சிறப்பு உருவகம்
8)
விரூபக உருவகம்
9)
சமாதான உருவகம்
10)
உருவக உருவகம்
11)
ஏகாங்க உருவகம்
12)
அநேகாங்க உருவகம்
13)
முற்று உருவகம்
14)
அவயவ உருவகம்
15)
அவயவி உருவகம்

எடுத்துக்காட்டு:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
(குறள். 10)

இப்பாடலின் பொருள் :
இறைவன் அடியாகிய புணையைப் (தெப்பம்) பற்றிக்
கொண்டோர்,     பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்;
அப்புணையைப் பற்றிக் கொள்ளாதோர் பிறவிப் பெருங்கடலை
நீந்தமாட்டார்கள்.

அணிப் பொருத்தம் :

    
இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்து
விட்டு, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகிய
இறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாது
விட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று

எடுத்துக்காட்டு:
அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்
மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை.

(முகிழ்-அரும்பு; கார்-மழை; மாதர்-விருப்பம்)

இப்பாடலின் பொருள் :

    '
நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகிய
தளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகிய
அரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்
தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்த
காதலுக்கு எல்லை உலகத்தில் உண்டோ இல்லை' என்று
தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அணிப் பொருத்தம் :

    
இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்
'
ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' என
வந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர்,
கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்
உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்
தொகை உருவகம் ஆயிற்று.

2 comments: