Wednesday 3 July 2013

உவமை அணி



உவமையணி

தமிழிலக்கணத்தில்உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது

மூன்று வகைகள்
உவமையணி மூன்று வகைப்படும்.
1.  பண்பு உவமையணி
2.  தொழில் உவமையணி
3.  பயன் உவமையணி
பண்பு உவமையணி
உதாரணம்குத்துப்பல், பவளவாய், கயல்விழிபவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
தொழில் உவமையணி
உதாரணம்புலிமறவன், குரங்குமனம்செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.
பயன் உவமையணி
உதாரணம்மழைக்கைமழை போல பொழியும்(கொடுக்கும்) கை
உவமையணியில் உவமானம் ,உவமேயம்உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்
உதாரணம்போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
சான்றுஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
உவமைத்தொகை
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்கயல்விழி - கயல் போல் விழிஇங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் - மதி போன்ற முகம்உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1-
எடுத்துக்காட்டு உவமையணி
2-
இல்பொருள் உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவமைது வலியான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.