Monday, 9 January 2012

இடுபணி- புதுக்கவிதை

மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும் கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் காலடி வைத்து, தடம் பதித்து பீடுநடை போட்டு வருகின்றது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் முதல் குழந்தை, என்கிற வரலாறு கொண்டது கவிதை இலக்கியமே ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய தமிழ்க் கவிதை 20ஆம் நூற்றாண்டிலும் 21ஆம் நூற்றாண்டிலும் மலேசிய தமிழ் இலக்கிய உலக்கிற்கு கணிசமான பங்கினை ஆற்றி வந்தது, வருகிறது என்பது வரலாறு கூறும் உண்மை. புதைக்க நினைத்த புதுக்கவிதை விதைக்கப்பட்டு முட்டிமோதி, முளைத்து, இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் புதுக்கவிதை பதிவு செய்துள்ளது. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை இலக்கியத்தின் இன்றைய வயது நாற்பத்து ஐந்து வயதாகும்.
புதுக் கவிதைக்கு வடிவம் உண்டா? இலக்கண வரம்பு உள்ளதா? என்பதே அனைவருடைய கேள்விக் கணைகளாக இருக்கிறது. இங்கே 'புது' என்கிற சொல்லே அதன் வடிவத்தை வரையறுக்கக் கூடிய சிறப்புப் பெறுகிறது. உருவத்தில் புதுமை உள்ளடக்கத்தில் புதுமை, உணர்த்தும் முறையால் புதுமை ஆகிய இந்த தன்மைகள்தான் இன்றைய புதுக் கவிதையின் வடிவமாகக் கருதப்படவேண்டும். மரபை மீறிய அல்லது மரபில் மாறுபட்ட தன்மையும் இதில் அடங்கும். எனவே, புதுக் கவிதையின் வடிவமானது புறத்தோற்றத்தில் இல்லை என்கிற தெளிவு முதலில் அவசியமாகும். 'யாப்பு என்பது புற வடிவமே. புதுக் கவிதை அக வடிவத்தையே முதன்மைப் படுத்துகிறது''. என்கிற கவிக்கோ அப்துல் ரகுமானின் வாக்கு மூலம் விசாரணை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். புதுக் கவிதைக் குரிய இந்த அகல புலங்களைத்தான், அங்கதம், முரண், குறியீடு, படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். கூறுகின்ற கருத்தை அப்படியே பட்டவர்த்தமாகக் காட்டுவது படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். குறியீடு என்பது கூறுகின்ற கருத்தை அழகுபட - எழிலூட்டிச் சொல்வதற்குப் பயன்படுத்துகின்ற உத்தி. மாறுபட்ட கருத்தின் தன்மை அல்லது ஒன்றை அமைத்துக் கொண்டு எழுதுவது முரண்வகை உத்தி எனப் படுகிறது. அங்கதம் என்பது மருந்தை இனிப்பாகக் கொடுக்கின்ற - மறைவாக உணர்த்தும் மற்றுமொரு உத்தி ஆகும். தவிர்த்து தெளிவு, சுருக்கம் போன்ற உத்திகளும் இன்று புதுக் கவிதையின் அகலபுலன்களாகக் காட்டப் படுகின்றன. இத்தகைய அகல வடிவங்களை புதுக் கவிதையின் வடிவமாக மிகத் தெளிவாக ஒரு புதுக் கவிதை விளக்குகிறது.
மரபுகவிதைகளின் எளிய வடிவம் தான் புது கவிதை. படிப்பவர் எல்லோருக்கும் புரியும் வகையிலும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகள், அழகியல், அரசியல், அனுபவங்கள், துயரங்கள், கோபம் இவற்றுடன் படிப்பவனுக்கு மனதில் ஒட்டக்கூடிய அளவிலான ஒப்புவமை மற்றும் தேர்ந்த வார்த்தைகளை கொண்டு நேரடியாக பேசும்போது படிப்பவனுக்கு கவிதை மேல் ஒரு பிரியம் வரும். படித்த பின்பும் அந்த கவிதையின் மொழி அதன் சந்ததினால் மனதில் தங்கும்.

ÒÐì¸Å¢¨¾¸¨Ç Å¡º¢òÐ «¾ý ¯ò¾¢ Өȸû, ¦¾¡ýÁõ, ÀÊமõ,  ÌȢ£Î, «í¸தõ, ÓÃñ, þÕñ¨Á §À¡ýȨŸ¨Ç «¨¼Â¡Çõ ¸¡ñ¸.


உத்தி முறைகள்
புதுக்கவிதைகள் அணி இலக்கண உத்திகளில் இருந்து மாறுப்பட்டு புதிய முறையில் படைக்கப் பட்டு வருகின்றன. கருத்துகளைக் கவிநயத்தோடு சுவைப்பதற்கு உத்திகள் முக்கிய பங்காற்றுகின்றன. கவிதையின் அழகும் அர்த்தமும் வெளிப்பட உத்தி முறைகள் பயன்படுகின்றன. இன்றைய புதுக்கவிதைகளில் பெரும்பாலும் கருத்துப் புலப்பாட்டு உத்திகள் பங்கு அதிகமாக உள்ளன. இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகியிருக்கும் புதுக்கவிதைக்கு உத்தியே ஏற்ற வடிவத்தைத் தந்து நிற்கின்றன. பிதுக்கவிதைகளின் உத்திகள் வடிவங்களாக அமைந்துள்ளன. புதுக்கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் பலவாகப் பிரிக்கலாம். காலத்தேவைக்கேற்பவும் கவிஞனின் தேடல்களுக்கு ஏற்பவும் உத்திமுறைகள் விரிவடைந்து வருகின்றன. இன்றையப் புதுக்கவிதைகளில்  படிமம், குறியீடு, அங்கதம், முரண் மிகுதியாகக் கையாளப்படுவதைக் காணமுடிகின்றது. புதுக்கவிதைக்கென்றே உருவாக்கப்பட்ட உத்திகளாக அங்கதம், படிமம், முரண், குறியீடு, தொன்மம், தற்குறிப்பேற்றம், கதைப்போக்கு, நாட்டுப்புறவியல், காட்சிப்படுத்துதல், நாடகப் போக்கு ஆகிய பிற உத்திகளும் கவிதை உத்திகளாகக் காணக்கிடக்கின்றன.

படிமம்
படிமம் என்பது புதுக்கவிதையின் பொருளை மனத்துக்கும் அறிவுக்கும் உணர்த்தப் பயன்படுகின்றது. உவமை, உருவகம், தொடர்களை அடுக்குதல் போன்றவற்றால் படிப்பவர் மனதில் ஒன்றைப் படிமமாக்குதலே படிமத்தின் பயனாகும். புதுக்கவிதை சொல்லவரும் செய்தியைத் துல்லியமாக உணர்த்துவதற்குக் கூர்மையும் சுருக்கமும் பயன்படுகின்றன. புதுக்கவிதையில் கருத்துப் படிமம், காட்சிப் படிமம், புலனுணர்வுப் படிமம் எனப் பிரிக்கும் பிரிப்பு முறை படிமத்தின் பண்புகளின் அடிப்படையில் அமைந்து முக்கியத்துவம் பெறுகின்றன.

அங்கதம்
புதுக்கவிதையில் அங்கதம் நான்கு முக்கிய நிலைகளில் இன்று வெளிப்படுகின்றன. அவை வஞ்சப் புகழ்ச்சி, ஏளனப் புகழ்ச்சி, நையாண்டி, மறைமுக ஏளனம்.
வஞ்சப் புகழ்ச்சி
இதனைப் புகழ்வதுபோல் இகழ்வதும், இகழ்வதுபோல் புகழ்வதும் ஆன நிலை என்று குறிப்பிடலாம்.

எ.கா.
“ஒருநாள் ஒரு பொழுதேனும்
நான் உண்ணாமல்
தான் உண்ணமாட்டார்
....................................
உயிரையே என்னிடம்
ஒளித்து வைத்துள்ளார்
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏளனப் புகழ்ச்சி
ஏளனப் புகழ்ச்சி என்பது வஞ்சப்புகழ்ச்சியைப் போன்றே அமைகின்றது. இங்கு ஓர் ஏளனம் படைப்பில் அடிநாதமாய் ஒலிப்பதனைக் காணலாம் ஏளனமாகப் புகழ்வதன் மூலம் சிக்கலை மறைமுகமாகச் சாடுகின்றது.
எ.கா.
“ராஜாக்கள்
வெண்கொற்றக் குடையின் கீழ்
வாழ வைத்தார்களாம்
இன்று
வறுமையைக் கோட்டின் கீழ்
வாழ வைக்கிறார்கள்!”

நையாண்டி
படைப்பில் மென்மையான நகைச்சுவை இழையோட, உட்பொருளோடும், குத்தலாகவும் விளங்குவது நையாண்டி ஆகும். நையாண்டி வழி அங்கதம் நம்மைச் சிரிக்க வைப்பதோடு, தொடர்ந்து சிந்திக்கவும் தூண்டுகிறது.

எ.கா.
“பெண்ணுக்குக் கணவனாகும்
வேலை காலி உண்டு
...................................
சம்பளம் வரதட்சிணைப் பேரில்
கொடுக்கப்படும்
வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
வேலை காலி உண்டு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்”

மறைமுக ஏளனம்
நேரடியாக சொல்ல வரும் செய்தியை செய்திக்கு வராமல் சுற்றி வளைத்துக் கூறும் போக்கு அதாவது மறைமுகமாகக் கூறும் நிலை இதில் காணப்படுகின்றது.

எ.கா.
“ஒரு வருஷமும் தவறாம
ஒரு நூறு தேங்காய்
ஒத்த ஆளா நின்னு
உடைப்பாரு
அ.லெ.மு.கண்ணாயிரஞ் செட்டியாரு
அவரு சொன்னாரு
“எத்தனை வருஷமாச்சு
அசலும் கட்டல
வட்டியும் கட்டல

குறியீடு
சொல்லில் அர்த்தத்தை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாக குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அர்த்தத்தை வாசகன் மனதில் விரியச் செய்யும் முயற்சியே குறியீடு.
எ.கா.
இந்த மரங்கள்
சகலகலா வல்லிகள்
பாருங்கள்
தென்றலில்
ரோங்கங் ஆடும்
இவை
காற்றில் பரதம்
அபிநயிக்கின்றன
புயலில்
டிஸ்கோ வேறு

முரண்
கவிதையின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மரபுக்கவிதையில் முரண் கவிதையின் இடையிடையே அமைந்திருக்கும். புதுக்கவிதையில் முரண் கவிதை முழுவதும் வியாபித்த நிலையில் விரவி அமைந்திருக்கும். புதுக்கவிதைகளின் தலைப்புகள், தொகுப்புகளின் தலைப்புகள், பொருள்கள், சொல்லாட்சி ஆகிய எல்லா நிலைகளிலும் ‘முரண்’ உத்தியை கவிஞர்கள் கையாண்டு வருகின்றனர்.


எ.கா.
“அவன்
ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”

தொன்மம்
தொன்மம் என்பதற்குப் புராணம் அல்லது புராணிகம் என்று பொருள் தருகிறது. தொன்மம் என்பதற்குப் பழமையான, பழமை சார்ந்த என்று பொது நிலையில் பொருள் கொள்ளலாம். புதுகவிதையில் கவிஞர்கள் அழகும் அர்த்தமும் வெளிப்பட கவிதைகள் இயற்றியுள்ளனர். இன்றைய நாட்டு நடப்புகள், சமூக சீர்கேடுகள், தனி மனிதரின் செயற்பாடுகள் தொன்ம உத்திகளாக புதுக்கவிதைகளில் உள்ளன.
எ.கா.
‘இராவணன்
வழுக்கி
விழ
அவன் வழைப்பழத்
தோலானான்’

No comments:

Post a Comment