
மகாகவி என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் பாரதியார். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்றிராமல், அந்தப் போராட்டக்களத்தில் தானும் குதித்து பங்கு தாரனாகவும் விளங்கியவர். தேசிய வாதியாகவும், அதே சமயம் சர்வதேசிய வாதியாகவும், இந்திய மக்களின் விடுதலைக்காக மட்டுமல்லாது, மனித குலம் அனைத்தின் விடுதலைக்கும் பாடியவர். போர்க்குணம் மிக்க மனிதாபிமானியாகவும், ஜனநாயகவாதியாகவும், மலர்ந்த ஒரு கவிஞனாகவும் தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னாள் என்றுமே கண்டதில்லை எனலாம். இத்தகு சிறப்பு மிக்க பாரதியாரின் படைப்பாக்கத்திறனைப் பற்றி இப்பாடத்தில் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டுத்
தமிழ்க் கவிதையுலகின்
தலைமகன் பாரதி,
புதுமைக் கவி, புரட்சிக்கவி, தேசிய
கவி, மறுமலர்ச்சிக்
கவி, மக்கள்
கவி என்றெல்லாம்
பாராட்டப்பட்டவர்.
மகாகவி என்று போற்றப்படும்
பெருமைக்குரியவர் பாரதியார்.
நமது தாய் மொழிக்கு புதிய
உயிர் தருவோன்
என்று கூறிய
பாரதியின் புரட்சி
மனப்பான்மை, அவருடைய
பாடலில் தெளிவாகிறது.
பாப்பா பாட்டில்,
சாதி வேறுபாடு
கூடாது என்பதை
உணர்த்தும் நோக்கில்
குழந்தைகளுக்காக, ‘சாதிகள்
இல்லையடி பாப்பா
- குலத்தாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவம்’
என்கின்றார்.
பாரதியார் குயில் பாட்டு எனும் கவிதையில் ஒன்பது தலைப்புகளில் கவிதைகளை
இயற்றியுள்ளார். பாரதியாரின் குயில் பாட்டு, கதைத் தொடருக்காகத் தோன்றிய கவிதையல்ல; அது
கருத்துகளையும், தத்துவங்களையும், வேதாந்தத்தையும் கூற ஓர்
ஊடகமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் ஆராயும் நூல். ஆன்மிகச் செய்திகள் எவ்வாறு குயில் பாட்டில் குறிப்புப் பொருளாக அமைந்துள்ளன என்பதை நூல் எடுத்துக் காட்டுகிறது. குயில் பாட்டு கற்பனையே ஆனாலும், அதை
வேதாந்தமாக விவரித்துப் பொருளுரைக்க முடியும்.
பாரதியார் குயில் பாடல்களை கீழ்கண்ட தலைப்புகளில்
இயற்றியுள்ளார்.










வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி ("சுப்பையா" என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்தவர்.
இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி. தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
1. பாரதியார் பகவத் கீதை (பேருரை) பூம்புகார் பதிப்பகம்
2. பதஞ்சலியோக சூத்திரம்
3. நவதந்திரக்கதைகள்
4. உத்தம வாழ்க்கை (காந்தி உபதேசங்கள்)
5. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
6. சின்னஞ்சிறு கிளியே
7. ஞான ரதம்
8. பகவத் கீதை
9. சந்திரிகையின் கதை
10. பாஞ்சாலி சபதம்
11. புதிய ஆத்திசூடி
12. பொன் வால் நரி
13. ஆறில் ஒரு பங்கு
14..குயில் பாட்டு
15.கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
2. பதஞ்சலியோக சூத்திரம்
3. நவதந்திரக்கதைகள்
4. உத்தம வாழ்க்கை (காந்தி உபதேசங்கள்)
5. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
6. சின்னஞ்சிறு கிளியே
7. ஞான ரதம்
8. பகவத் கீதை
9. சந்திரிகையின் கதை
10. பாஞ்சாலி சபதம்
11. புதிய ஆத்திசூடி
12. பொன் வால் நரி
13. ஆறில் ஒரு பங்கு
14..குயில் பாட்டு
15.கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார். 1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தேசியக் கவி
தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு
மகாகவி பாரதியார் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்திய 'விஜயா' என்கிற மாலை நாளேட்டின் சில பிரதிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பாரதியார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எட்டு மாத காலம் 'விஜயா' என்கிற தமிழ் மாலை நாளேட்டை பாண்டிச்சேரியிலிருந்து நடத்தினார். நான்கு பக்கம் கொண்டு இந்த நாளேட்டின் முதல் இதழ் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியானது. இந்த நாளிதழை நடத்தும் போது பாரதியாரின் வயது 28தான். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த நாளிதழ் வெளிவரவில்லை. மொத்தம் 160 நாட்கள் இந்த நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது. முதல் பக்கத்திலும், நான்காம் பக்கத்திலும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பக்கத்தில் தலையங்கமும், கட்டுரையும் காணப்படுகிறது. மூன்றாம் பக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பாரதிக்கேயுரிய நடையில் அமைந்த செய்திகள் இடம்பெற்றன.
'விஜயா' நாளேட்டை பாரதியார் நடத்தினார் என்பது தெரிந்த போதிலும், முழுமையான நாளிதழின் பிரதிகள் கைக்கு கிடைக்காமல் இருந்தது. சில பகுதிகள் மட்டுமே கிடைத்து, அவை பாண்டிச்சேரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் பாரதி நினைவகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரதியாரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவன இணை பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி மேற்கொண்ட தீவர முயற்சியின் விளைவாக இந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் வெளியான இந்த நாளிதழின் 20 நாட்களுக்கான பிரதிகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
'விஜயா' நாளேட்டை பாரதியார் நடத்தினார் என்பது தெரிந்த போதிலும், முழுமையான நாளிதழின் பிரதிகள் கைக்கு கிடைக்காமல் இருந்தது. சில பகுதிகள் மட்டுமே கிடைத்து, அவை பாண்டிச்சேரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் பாரதி நினைவகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரதியாரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவன இணை பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி மேற்கொண்ட தீவர முயற்சியின் விளைவாக இந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் வெளியான இந்த நாளிதழின் 20 நாட்களுக்கான பிரதிகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின்
குயில் பாட்டு,
கதைத் தொடருக்காகத்
தோன்றிய கவிதையல்ல;
அது கருத்துகளையும்,
தத்துவங்களையும், வேதாந்தத்தையும் உள்ளடக்கிய பாடலாகும். பாரதியார் குயில் பாட்டினை அழகுமிக்க கவிதை நயத்தோடு
இயற்றியுள்ளார். குயில் பாடல் ஓரிடத்திலும் இடறல் இல்லாமல் ஆற்றொழுக்காய் ஓடிக்கொண்டேயிருக்கும் தன்மை வாய்ந்தவை. பாடல் வரிகள் மிகுந்த ஈர்ப்புத் தருபவை. அதில் உள்ள சொற் சேர்க்கைகள் எண்ணுந்தோறும் இன்பம் பயப்பவை. மின்னற்சுவை, கவிதைவெறி, நாதக்கனல், மோகனப் பாட்டு, சோதித்திருவிழி, மோனஒளி, இன்பக்களி எனப் பட்டியலிட்டால் நீண்டு செல்லும் சொற்சேர்க்கைகள் பல. புதிய புதிய சொற்சேர்க்கைகள் சில சமயம் கவிஞர்களைச் சொல் மோகத்திற்குள் கொண்டு தள்ளிவிடும். ஆனால் குயில் பாடலில் அபத்தமான சொற் சேர்க்கைகளை ஓரிடத்திலும் காண முடியாது. 'மின்னற்சுவை' என்னும் ஒரு சொற்சேர்க்கை வாசிப்பவரை மயக்கத்தில் ஆழ்த்தி எங்கோ கண்காணாத இடத்திற்குத் தூக்கிச் செல்லும் சுகத்தைப் பொதிந்துவைத்திருக்கிறது. இதனை விரித்துச் சொல்வார்.
“மின்னற் சுவைதான்
மெலிதாய் மிகவினிதாய்
வந்து
பரவுதல்போல், வானத்து
மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்”
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்”
குயிலின் இன்னிசைத் தீம்பாடலினை விளக்குவதற்கு இப்படி ஓர் உவமை. மின்னல் மெலிதாகவும் மிக இனிதாகவும் பரவும் அழகைச் சுவையென்று உணர மேன்மைச் சித்தம் அமையப்பெற வேண்டும். இத்தகைய சொற்சேர்க்கைகள் மூலம் அவர் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் நிறைய உள்ளன.
குயில் பாடல்கள் அனைத்தும் எளிய நடையில்
இயற்றப்பட்டுள்ளன. அனைவரும் படித்து பொருள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில்
பாரதியார் குயில் பாடலை மரபுக் கவிதை முறையில் இயற்றியுள்ளார். இயல்பாகவே பழமைல்
கவிதைகள் படித்துப் புரிந்துக் கொள்வது என்றால் மிகவும் கடினமாகவே இருக்கும்.
குயில் பாடல்கள் அனைத்தும் மனித வாழ்வில் நடக்கும் சம்வவங்களை மையமாக கொண்டவை.
எளிய நயம் கொண்டவையாக உள்ளன.
காற்றில்
மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே!
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா!............
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா!............
மறைப்பொருள்
ஏதுமின்றி இயல்பாக அனைவரும் பொருளுணர்ந்து கொள்ளும் நடையில் கவிதை நயம் உள்ளது.
பாரதியார் குயில் பாட்டில் கட்சிப் பொருளாக
மரம், செடி, கொடி, நிலம், வானம், கடல், மேகம் போன்ற சொற்களைக் கையாண்டுள்ளார்.
கவிதையின் பொருளை மனத்துக்கும் அறிவுக்கும் உணர்த்தும் வகையில் உள்ளது.
“நீலப்
பெருங்கடலெந் நேரமுமே
தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்..................
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்..................
உவமை,
உருவகம், மூலம் பல செய்திகளை தொடர்களாகவும் துல்லியமாகவும் உணர்த்தியுள்ளார்.
பாரதியார் குயில் பாடலில் கருத்துப் படிமம், காட்சிப் படிமம்,
புலனுணர்வுப் படிமம் எனும் முறையில் படிமத்தின் பண்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்திருக்கின்றார். குயில் பாடல் மனதில் பதியும் வண்ணம் குயிலின் சோகக் கதையை
சில கதை மாந்தர்களைக் கொண்டு இயற்றியுள்ளார். குயில் தனது அகவுணர்வுகளை கரைந்துக்
கொண்டு கூறும் பாடல் வரிகள் கவிதை நய சிறப்புகளைக் காட்டிவதாக உள்ளன.
குயில் பாடலில் எதுகை, மோனை, சந்தம், ராகம்
போன்ற கவிநயங்கள் இடம்பெற்றுள்ளன. குயில் பாடலை பாடலாக பாடி மனனம் செய்யும் முறையில்
பாரதியார் கவிதையை இயற்றியுள்ளார். இளைய தலைமுறையினர் கவிநயங்களை புரிந்துக்
கொள்ளக் கூடியவையாகவுள்ளன.
“நாதம்,
நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்”.......................போன்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன. கவிதை நயம் புலப்படுகின்றன.
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்”.......................போன்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன. கவிதை நயம் புலப்படுகின்றன.

குயில் பாடலில் அதிகமான வரிகள் இயற்கை
வருணனையாக உள்ளன. பாரதியார் கவிதைக்கு அழகு சேர்ப்பதற்காக இயற்கை வர்ணனையை சேர்த்துள்ளார்.
“காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோ.”............
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோ.”............
“வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்”...................
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்”...................
காலையிலே சூரிய ஒளி வீசும்
அழகினையும் கடலோடு ஒட்டிப் பிறக்கும் சூரியனின் தன்மைகளையும் அழகாக
வர்ணிக்கின்றார். வானத்தில் மின்னிடும் வட்ட உரு தட்டு சூரியன் என்று
கூறுகின்றார்.
“வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்”.............
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்”.............
“மேவுமொரு மாஞ்சோலை” “வாய்ந்த பெருஞ்சோலை” என்று குயில்கள்
வாழும் இடங்களை சோலையென்றும் அழகிய பூந்தோட்டம் என்றும் வர்ணிக்கின்றார்.
குயில்கள் வாழும் இடம் அழகிய சோலைகளாகவும் பார்ப்பவர் கண்களுக்கு மனமகிழ்வு
ஊட்டும் காட்சிகளாகவும் உள்ளன என்று கூறுகின்றார். குயில் பாட்டில் நிறையா
உவமானங்களையும் உவமேயங்களையும் இயற்கை வர்ணனையோடு இனைத்து கவிதையைப்
படைத்துள்ளார்.
“வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய”...............
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய”...............
“காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்”............
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்”............
காடு, நிலம், காற்று, ஆகயம்,
கடலின் நீல நிற வண்ணம் என பல இயற்கைச் சேர்க்கைச் சொற்களை பாடல் வரிகளில் இணைத்து
பாடியுள்ளார். குயிலினம் காலையில் எழுந்து கூவும் ஓசைகளை கடலலையோடு ஒப்பிட்டுப்
பாடியுள்ளார்.

''காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்''..................
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்''..................
காதல்,
காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்..................................
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்..................................
குயில் பெண்ணாக இருந்த பிறவியில்
காதல் வசம் கொண்டு காதல் புரிந்தவளாக திகழ்கின்றாள். குயிலாக வாழும் காலத்தில்
காதலனை தேடி அழைகின்றாள். காட்டில் குயிலாக வாழும் பிறப்பில் காதலனைத் தேடி அவன்
வரவை நாடி அவன் வராத நிலையில் வாடி மேற்கண்ட பாடல்களைப் பாடுகின்றாள். காதல்
சுகத்தை அனுபவித்தமையால் அந்த சுகம் கிடைக்காததினால் காடுகளில் அலைந்து திரிந்து
பாடிக் கொண்டிருக்கின்றாள். காதலனை காணாது ஏக்கம் கொள்கிறாள். வாழ்ந்தால் காதலநோடு
வாழவேண்டும் இல்லையெனில் வாழ்வையே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
இருக்கின்றாள்.
கூடல்,
கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்............
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்............
''பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை.
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்.................
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை.
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்.................
ஓர் ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலானது இரண்டரக் கலந்த
உறவாகும் என்று பாரதியார் கூறுகின்றார். இருவரும் கொண்டுள்ள காதலானது இணைப்பிரியா
காதலுறவாகவும் எல்லையில்லா அன்பு கொண்டதாகவும் உள்ளது.

குயில் பாடலில்
ஆன்மீகச் சிந்தனைகளாக பல செய்திகளை பாரதியார் புகுத்தியுள்ளார்.
- இந்து மதக் கோட்பாட்டினை மீறுபவர்களின் வாழ்க்கை நிலை என்னவாகும் என்று கூறியுள்ளார்.
- ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் காதலர்களும் ஒட்டு மொத்த மானிடர்களும் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.
- மனிதவாழ்வில் ஏழு பிறப்புகள் உண்டு என்பதனை கோடிக்காட்டியுள்ளார்.
- முன் பிறப்பு மற்றூம் ஊழ்வினை தொடர்பான செய்திகளையும் நினைவுருத்தியுள்ளார்.
- காதல் வாழ்க்கையை மறந்து கலவு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் வாழ்க்கை நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தீங்குகளையும் பாடல் வழி கூறியுள்ளார்.
“இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு,
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே!''
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது”...........
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே!''
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது”...........
“சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்”...............
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்”...............
முற்பிறப்பில் செய்த கர்ம காரியங்களின்
பயனாக வேடக்குல பெண்ணானவள் மறுபிறப்பில் குயிலாக பிறந்திருக்கின்றாள். பாடும் குயிலாகவும்
மனிதர்கள் பேசும் பேச்சை அறிந்து உணரும் தன்மைக் கொண்டவளாக படைக்கப்பட்டுள்ளாள்.
மனிதர்கள் முறையான திருமண வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை குறை என
பாரதியார் கூறுகின்றார்.

'குயில்' பாட்டில் வேதாந்தப் பொருள்,
மேலோட்டப் பொருள் என இரு வகையாக உள்ளன. மனித வாழ்க்கைக்குத் தேவையான பல விவரங்களைப் பாரதியார்
கூறியுள்ளார். மனிதர்கள் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ
வேண்டும் என்று பாடல்கள் வழி அறிவுறுத்துகின்றார். ஒழுக்க நெறியில் வாழாதவர்களின் வாழ்க்கையில்
என்ன நிகழ்கின்றன என்ற அறிவுறுத்தலை மானிடர்களுக்குக் கூறுகின்றார்.
“ஆவி
தரியேன், அறிந்திடுவீர், நான் காநாள்.
பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன்,
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்”..............
பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன்,
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்”..............
நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும் இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம் பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது.
பெண்ணால்
அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல்.............
காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல்.............
பெண் மீது அதிக மோகம் கொண்ட ஆணும் ஆண்
மீது அதிக மோகம் கொண்ட பெண்களும் சிறந்த வாழ்க்கை வாழ முடியாது என்ற உண்மையை பாரதியர்
எதிர்மறையாக கூறுகின்றார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------.

- http://www.eegarai.net/t202p15-topic
- http://jayabarathan.wordpress.com/bharathiyar/
- http://www.kalachuvadu.com/issue-84/bharathi06.asp
- http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
- http://www.tamilkalanjiyam.com/literatures/subramaniya_bharathiyar/kuyil_song.html
- http://kala-tamilforu.blogspot.com/2011/01/blog-post_08.html
- http://vivekanandadasan.wordpress.com/2011/05/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/
No comments:
Post a Comment