Monday 6 June 2011

REFLEKSI - இடுபணி

இந்த இடுபணி சிறப்பாக அமைய எல்லா வகையிலும் எங்களுக்கு உதவி புரிந்த விரிவுரையாளர் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டலின் முறையே இந்த பணியை நாங்கள் அனைவரும் மேற்கொண்டுள்ளோம். இந்த இடுபணி மொழியியல் தொடர்பான விவரங்களை திரட்டும் வண்ணம் அமைந்திருந்தது. கேள்வி படிப்பதற்குச் சுலபமாகத்தான் இருந்த்து, ஆனால் பணியில் ஈடுபாடுடன் இணைய வாயிலாக தேடும் போது எண்ணற்ற விவரங்களை கண்டேன் மகிழ்ந்தேன். இணையம் ஒரு மணற்கேணிப் போன்றது. தோண்ட தோண்ட நீர் ஊறுவதுப் போல தேட தேட விவரங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டே இருந்தன. இணையத்தில் தமிழுலகுக்குச் சென்றால் எண்ணற்ற இலக்கியம், இலக்கணம், நாவல், புதினம், இதழ், செய்திகள் என்று பல விவரங்கள் உள்ளே கோர்வையாக சேர்க்கப்பட்டுள்ளன. இணையம் வாயிலாக தமிழ் மொழி போதிக்கும் பல்கலைக்கழகங்களுக்கும், தமிழ் பிரிவு துறைகளுக்கும், தமிழ் பேராசிரியர்களின் இணைய முகவரிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிய விவரங்களை இணையம் வாயிலாக தேடச்சென்று பல புதிய செய்திகளையும், படைப்புகளையும், கட்டுரைகளையும் விவரங்களையும் எனது இல்ல கணினியில் தமிழ் மொழி மின்னியல் தேடல் என்ற தலைப்பில் கோப்பிலிட்டுள்ளேன்.
     தமிழ் மொழி பற்றிய செய்திகள் தமிழ் விக்கிப் பிடியாவில் உள்ளது. மொழி »¡Â¢Ú தேவநேயப் பாவாணர் அவர்களின் மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் எனும் புத்தகத்திலும் தமிழ் மொழி பற்றிய செய்திகள் உள்ளன. தமிழ் மொழியின் வரலாறு, தொன்மை, மேன்மை, இலக்கியம், இலக்கணம், சங்க காலம் போன்ற செய்திகள்  இணையத்தில் நிறைய உள்ளன.
     மொழியியல் வரையறை,வகைகள் தொடர்பான செய்திகளைத் தேடியெடுப்பதில் சிக்கலாகவே இருந்தது. தமிழ் மொழியில் செய்திகள் அல்லது கட்டுரைகள் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. மொழியியல் பற்றிய செய்திகள் தமிழ் மொழியில் கிடைப்பதற்கு அரிதாக உள்ளது. கல்லூரியில் வழங்கப்பட்ட பாடத்திட்ட புத்தகத்தையும் விரிவுரையாளர் கொடுத்த குறிப்பேட்டையும் மையமாக வைத்து இந்த தலைப்பைச் செய்து முடித்தேன். மொழியியல் துறையானது பெரிய துறையாக இருப்பதால் படித்து அறிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மொழியியல் துறையில் பாண்டியத்துவம் அடைவது எளிதான காரியம் அல்ல என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன். மொழியியல் துறைகளைப் பற்றிய ஆய்வு கட்டுரைகள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் கற்றுத் தெரிந்துக் கொள்ள சில காலங்கள் ஆகும்.
     ஒலியியல், ஒலிப்பியல் மற்றும் ஒலியன்  தொடர்பான விவரங்களை சில கட்டுரைகள் மூலம் திரட்டினேன். ஒலியியல் பிரிவுகளைப் பற்றி அறிந்து கொள்ள சற்று கடிணமாகவே உள்ளது. மொழியியல் மற்றும் ஒலியியல் பிரிவுகள் ஒவ்வொன்றும் தொடர்புடையதாக இருப்பதால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. பல முறை படித்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒலிப்பியல் பிரிவானது நிறைய விவரங்களை உள்ளடக்கியுள்ள துறையாகும். ஒலிப்பியல் துறையில்  ஒர் ஒலியின் முழுமையான விவரங்களை கண்டறிய முடிகின்றது. ஒலியன் தலைப்பில்  ஒலியன் வகைகள்,   ஒரு ஒலியன் மாற்றம் அடையும் முறையை, இணையும் முறை பற்றி புரிந்து கொண்டேன். தமிழ் ஒலியன்களின் ஒலிப்பு முறையைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது.
     பேச்சொலிகளின் வரைப்படங்கள் தமிழ் மொழியில் எங்கு தேடினும் கிடைக்கவில்லை. மலாய் மொழி ஆய்வு கட்டுரையிலிருந்து மொழிப் பெயர்த்து இந்த தலைப்பினை செய்து முடித்தேன். பேச்சுறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்ற அறிவை இந்த தலைப்பினை செய்யும் போது கற்றுக் கொண்டேன். தமிழ் மொழியின் பேச்சொலிகளின் வகைகளையும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் பற்றி புரிந்துக் கொண்டேன்.
     இந்த இடுபணி மூலம் தமிழ் இணைய பல்கலைக்கழகம் என்ற இணைய தளம் உள்ளதைத் தெரிந்துக் கொண்டேன். இந்த இணைய தளத்தில் நிறைய செய்திகளையும் விவரங்களையும் திரட்டி எடுக்க முடிந்தது. மழலைக் கல்வி தொடங்கி பட்டப் படிப்பிற்கான பாட அறிமுக விளக்க கட்டுரைகள் இந்த தளத்தில் உள்ளன. இந்த இடுபணியானது தமிழ் மொழியை மீண்டும் ஆழமாக படிக்க உதவிப் புரிந்த்து. மொழியியல் தொடர்பான நுண்ணறிவு மற்றும் பொது அறிவு செய்திகளைப் படித்து தெரிந்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment